உன் பாதம் எனும் பூக்கள் என்னை உதைத்தாலும்
என்னை நறுமணம் நிறைந்த பூக்கள் தீண்டும்
உன் ஊசி எனும் பார்வை என்னை வதைத்தாலும்
என் கண்களெனும் பாலைவனத்தில் நீர் சுரக்கும்
உன் கலை மிகுந்த உள்ளங்கைகள் என்னை அடித்தாலும்
என் பாவப்பட்ட கன்னங்களும் பல வண்ண பட்டாம்பூச்சிகள் ஆகும்
உன் மூச்சு எனும் அக்ஷய பிச்சையை நான் திருடினாலும்
என்னை முழுவதும் உயிர்பிக்கும் கனவு மெய்பிக்கும்
என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருப்பாய் எனின்
நான் இறந்த பின்பு மோக்ஷம் எனும் வாய்ப்பில்லாமல் போய்விடும்
ஏனெனில்
…
…
…
…
நீ நான் பெற்ற தெய்வம்
நீ நான் பெற்ற குழந்தை!